logo

Vaasa Karuvepilaiye

logo
الكلمات
வாசக் கருவேப்பிலையே

என் மாமன் பெத்த மல்லிகையே

வாசக் கருவேப்பிலையே

என் அத்தை பெத்த மன்னவனே

ஊதக்குளிரு காத்து

அது ஊசி குத்துற போது

உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு

ஊதக்குளிரு காத்து

அது ஊசி குத்துற போது

உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு

வாசக் கருவேப்பிலையே

என் மாமன் பெத்த மல்லிகையே

நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா

உலக அதிசயத்தில் இப்படி ஒண்ணா

நடந்தா தென்மதுரை பாண்டியன் போல

நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை

நன்றி கெட்ட சேலை

அது வேணா விட்டுருடி

கண்ணே உந்தன் சேலை

இனி நான்தான் கட்டிக்கடி

எட்டி நில்லு சாமி

நீ தொட்ட ஒட்டிக்குவே

தொட்டில் ஒன்னு போடா

ஒரு தோது பண்ணிக்குவே

இப்போதே அம்மாவா நீ ஆனா

என் பாடு என்னாகும் வாம்மா

வாசக் கருவேப்பிலையே

என் அத்தை பெத்த மன்னவனே

ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல

உதடும் முள்முருங்க பூத்தது போல

கருப்பு வைரத்தில செஞ்சது தேகம்

கண்டதும் இளசுக்கெல்லாம் வந்திடும் மோகம்

எந்த பொண்ணு கையும்

என்னை இன்னும் தொட்டதில்ல

இன்று மட்டும் கண்ணே

நம்ம கற்பும் கெட்டதில்ல

கற்பு உள்ள ராசா

நான் உன்ன மெச்சிக்குறேன்

கட்டிக்கைய்யா தாலி

உன்ன நல்ல வச்சுக்கிறேன்

கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்

கையோடு கை சேர்த்து போவோம்

வாசக் கருவேப்பிலையே

என் அத்தை பெத்த மன்னவனே

வாசக் கருவேப்பிலையே

என் மாமன் பெத்த மல்லிகையே

ஊதக்குளிரு காத்து

அது ஊசி குத்துற போது

உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு

ஊதக்குளிரு காத்து

அது ஊசி குத்துற போது

உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு

வாசக் கருவேப்பிலையே

என் அத்தை பெத்த மன்னவனே

Vaasa Karuvepilaiye لـ Arunmozhi/S Janaki - الكلمات والمقاطع