huatong
huatong
avatar

Kannile Iruppathenna

Bhanumathihuatong
ry34_starhuatong
الكلمات
التسجيلات
இசை : ஜி. ராமநாதன்

பாடியவர் : பி பானுமதி

பாடலாசிரியர் : கே. டி. சந்தானம்

கண்ணிலே இருப்பதென்ன

கன்னி இளமானே

காவியமோ ஓவியமோ

கன்னி இளமானே

கண்ணிலே இருப்பதென்ன

கன்னி இளமானே

காவியமோ ஓவியமோ

கன்னி இளமானே

வண்ண முக வெண்ணிலவில்

கன்னி இளமானே

வண்டு வந்ததெப்படியோ

கன்னி இளமானே

கண்ணிலே இருப்பதென்ன

கன்னி இளமானே

காவியமோ ஓவியமோ

கன்னி இளமானே

அன்ன நடை பின்னுவதேன்

கன்னி இளமானே... ஏ.....

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ....ஆ....

அன்ன நடை பின்னுவதேன்

கன்னி இளமானே

யார் விழிகள் பட்டனவோ

கன்னி இளமானே

சின்ன இடை மின்னலெல்லாம்

கன்னி இளமானே

தென்றல் தந்த சீதனமோ

கன்னி இளமானே

கார்குழலை ஏன் வளர்த்தாய்

கன்னி இளமானே

காளையரை கட்டுதற்கோ

கன்னி இளமானே

கார்குழலை ஏன் வளர்த்தாய்

கன்னி இளமானே

காளையரை கட்டுதற்கோ

கன்னி இளமானே

பார்வையிலே நோய் கொடுத்தாய்

கன்னி இளமானே

பக்கம் வந்து தீர்த்து வைப்பாய்

கன்னி இளமானே

பல் வரிசை முல்லை என்றால்

கன்னி இளமானே...

ஏ... ஏ... ஏ.... ஆ...ஆ.....

பல் வரிசை முல்லை என்றால்

கன்னி இளமானே

பாடும் வண்டாய் நான் வரவா

கன்னி இளமானே

பானுமதி மாறி வரும்

கானகத்து மீனே

பார்க்க உன்னை தேடுதடி

கன்னி இளமானே

கண்ணிலே இருப்பதென்ன

கன்னி இளமானே

காவியமோ ஓவியமோ

கன்னி இளமானே...

المزيد من Bhanumathi

عرض الجميعlogo