பெ: நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்..
காலமுள்ள வரைக்கும்
காலடியில் கிடக்க
நான்தான் விரும்புறேன்..
நெடுங்காலம் நான் புரிஞ்ச..
தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….
ஆ: ஊரறிய உனக்கு
மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம்...
உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்...
பெ: செவ்விளநி நான் குடிக்க
சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்..
ஆ: கள்ளிருக்கும் தாமரையே
கையணைக்கும் வான்பிறையே
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிர்தான்..
பெ: இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
ஆ: விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்..
பெ: உன்னப் போல தீபமில்ல
உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான்
எனக்கு வேற வேலை இல்ல
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
ஆ: ஆ…..உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்..