huatong
huatong
الكلمات
التسجيلات
போகாதே, போகாதே

நீ இல்லாமல் ஆகாதே

உன் மீது நான் வைத்த

காதல் தான் மாறாதே

என்றும் மாறாதே மாறாதே

இந்த மனிதப் பிறவி

பெண் அன்பினில் அடங்கிடும்

(ஒஹொஹொ ஒஹொஹொ ஹொஹொஹொ)

என்தன் பெரிய உலகம் உன் விழியினில் அடங்கிடும்

(ஒஹொஹொ ஒஹொஹொ ஹொஹொஹொ)

இல்லாத நேரத்தில்

பொல்லாத தாளத்தில்

தப்பாமல் என் வாழ்க்கை தப்பாகி போகாதோ?

வழி எதும் தெரியாது

விழி ரெண்டும் கிடையாது

என் கண்ணே நீ சென்றால்

இருளாக மாறாதோ?

இருளாக மாறாதோ?

இருளாக மாறாதோ?

எரிய எரிய

வெளிச்சம் நெரையும்

உருகி உருகி மெழுகும் கரையும்

பிரிய பிரிய காதல் தெரியும்

அறிய அறிய கண்கள் கலையும்

இந்த மனிதப் பிறவி

பெண் அன்பினில் அடங்கிடும்

(ஒஹொஹொ ஒஹொஹொ ஹொஹொஹொ)

என்தன் பெரிய உலகம் உன் விழியினில் அடங்கிடும்

(ஒஹொஹொ ஒஹொஹொ ஹொஹொஹொ)

இந்த மனிதப் பிறவி

பெண் அன்பினில் அடங்கிடும்

(ஒஹொஹொ ஒஹொஹொ ஹொஹொஹொ)

வானத்தையே யாசித்த பறவை ஒன்று (ஒன்று)

சிறையில் மாட்டித்தான் தவிக்குது இன்று (இன்று)

கடலையே நேசித்த கெளுத்தி ஒன்று (ஒன்று)

கடலும் வத்திப்போக கண்ணீர் கரையில் நின்று

கண்ணாடி கரையில் கண்ணீர் கொண்டு

உன்னையே சுவாசித்த காதலன் இன்று

உண்மையாய் நிக்கிறேன் வேதனை கொண்டு

கண்ணாடி கரையில் கண்ணீர் கொண்டு

உன்னையே சுவாசித்த காதலன் இன்று

உண்மையாய் நிக்கிறேன் வேதனை கொண்டு

இவை யாவும் காதல் வண்ணம்

ஒரு நாளில் நீயும் நானும்

ஒன்றாக கைக்கோர்க்கலாமா?

போகாதே, போகாதே

நீ இல்லாமல் ஆகாதே

உன் மீது நான் வைத்த

காதல் தான் மாறாதே

என்றும் மாறாதே மாறாதே

இந்த மனிதப் பிறவி

பெண் அன்பினில் அடங்கிடும்

(ஒஹொஹொ ஒஹொஹொ ஹொஹொஹொ)

என்தன் பெரிய உலகம் உன் விழியினில் அடங்கிடும்

(ஒஹொஹொ ஒஹொஹொ ஹொஹொஹொ)

இந்த மனிதப் பிறவி

பெண் அன்பினில் அடங்கிடும்

(ஒஹொஹொ ஒஹொஹொ ஹொஹொஹொ)

என்தன் பெரிய உலகம் உன் விழியினில் அடங்கிடும்

(ஒஹொஹொ ஒஹொஹொ ஹொஹொஹொ)

المزيد من Jen Martin/Vishnu Edavan/Yuvan Shankar Raja

عرض الجميعlogo

قد يعجبك