huatong
huatong
الكلمات
التسجيلات
ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே, விழுவது ஒரு சுகம்...

அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே, கலைவதும் ஒரு சுகம்...

என்னோடு புது மாற்றம் தந்தாள்...

எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்...

என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்...

அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ...

கண் தூங்கும் போதும் காதல் தந்தாள்...

அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்...

ஹோ... ஹோ...

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே, விழுவது ஒரு சுகம்...

அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே, கலைவதும் ஒரு சுகம்...

என் வானில் மேகங்கள், சொல்லாமல் தூறுதே

என் காதல் வானிலை, சந்தோசம் தூவுதே

நீ தந்த பார்வை, நனைந்தாலே பாவை

அன்பே அன்பே எந்தன் நெஞ்சில்...

ஒளி வீசும் காலை, இருள் பூசும் மாலை

உந்தன் முகம் எந்தன் கண்ணில்...

மின்சாரம் இல்லா நேரத்தில், மின்னலாய் வந்து ஒளி தருவாள்

அந்த வெளிச்ச மழையில் நான் நனைந்திடுவேன்

விரல் தொட்டு விடும் தூரத்தில், மனம் சுட்டரிக்கும் பாரத்தில்

புரியாத போதை, இது புரிந்த போதும்

அவள் பக்கம் வர பக்கம் வர, படபடக்கும்...

ஹோ... ஹோ...

அவள் மாலையில் மலர்ந்திடும் மலர் அல்லவா... வாசனை என் சொந்தம்...

அவள் அனைவரும் ரசித்திடும் நதி அல்லவா... அலை மட்டும் என் சொந்தம்

கண்ணாடி அவள் பார்த்ததில்லை, ஏன் என்று நான் கேட்டதில்லை...

அவள் அழகை அழகா ஒரு கருவி இல்லை...

அவள் கட்டளையை கேட்டு தான், நான் கட்டுப்பட்டு வாழுவேன்

அறியாத பாதை இது அறிந்த போதும்...

அவள் பக்கம் வர பக்கம் வர படபடக்கும்

ஹோ... ஹோ...

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே, விழுவது ஒரு சுகம்...

அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே, கலைவதும் ஒரு சுகம்...

என்னோடு புது மாற்றம் தந்தாள்...

எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்...

என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்...

அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ...

கண் தூங்கும் போதும் காதல் தந்தாள்...

அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்...

ஹோ... ஹோ...

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே, விழுவது ஒரு சுகம்...

அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே, கலைவதும் ஒரு சுகம்...

المزيد من Joshua Sridhar/Clinton/Shweta Mohan

عرض الجميعlogo