logo

Endhan Paadalgalil (From"Uravai kaatha Kili")

logo
الكلمات
கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே

நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

உன்னை பாராமலே மனம் தூங்காதடி

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

உன்னை பாராமலே மனம் தூங்காதடி

வலம்புரி சங்கைகூட உன்கழுத்து மிஞ்சுதடி வஞ்சிமலரே

ஓ நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி வைரசிலையே

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

உன்னை பாராமலே மனம் தூங்காதடி

வசந்தம் என்னும் ஒரு பாவை

நீ அசைந்து வந்த ஒரு சோலை

வசந்தம் என்னும் ஒரு பாவை

நீ அசைந்து வந்த ஒரு சோலை

பப பப பப பப பபா பப பப பப பப பபா

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா

போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா

பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா

போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா

பொய்கை வண்டாய் உன் கை மாற

மங்கை நாண செய்கை செய்தாய்

வைகை போல் நாணத்தில் வளைகின்றேனே

வைகைநீ என்றுன்னை சொல்கின்றேனே

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

உன்னை பாராவிடில் நித்தம் உறங்காவிழி

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு

நெஞ்ச பானையில நித்தம் வேகிறது உன்நினைப்பு

பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு

நெஞ்ச பானையில நித்தம் வேகிறது உன்நினைப்பு

வார்த்தை தென்றல் நீ வீசும் போது ஆடும் பூவாய் ஆனேன் மாது

இதழோரம் சில்லென்று நனைகின்றது

சிந்தும் தேன்கூட சிந்தொன்று புனைகின்றது

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

உன்னை பாராமலே மனம் தூங்காதடி

வலம்புரி சங்கைகூட உன்கழுத்து மிஞ்சுதடி வஞ்சிமலரே

ஓ நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி வைரச் சிலையே

வசந்தம் என்னும் ஒரு பாவை

நீ அசைந்து வந்த ஒரு சோலை

வசந்தம் என்னும் ஒரு பாவை

நீ அசைந்து வந்த ஒரு சோலை

Endhan Paadalgalil (From"Uravai kaatha Kili") لـ K. J. Yesudas/B.S. Sasirekha/T. Rajendar - الكلمات والمقاطع