கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை
நதியோரம் நடந்து…
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
கண்ணா...கண்ணா…கண்ணா…
நீலவானும் நிலவும் நீரும்
நீயென காண்கிறேன்
உண்ணும் போதும்
உறங்கும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்
கண்னன் வந்து நீந்திடாது
காய்ந்து போகும் பாற்கடல்
உன்னை இங்கு ஆடை போல
ஏற்றுக்கொள்ளும் பூவுடல்
வேறில்லையே பிருந்தாவனம்
விடிந்தாலும் நம் ஆலிங்கணம்
சுவர்க்கம் இதுவோ…..
மீரா… வருவாளா
கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை
நதியோரம் நடந்து…
மீரா வருவாளா..
கண்ணன் கேட்கிறான்
மல்லிகைப் பஞ்சணையிட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம்… தீர்க்கவா..
மல்லிகைப் பஞ்சணையிட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம்.. தீர்க்கவா..
மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவள்ளி
ராகம்… சேர்க்கவா…
மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவள்ளி
ராகம்… சேர்க்கவா….
கொடி இடை ஒடிவதன் முன்னம்
மடியினில் எடுத்திடவா
மலர்விழி மயங்கிடும் வண்ணம்
மதுரசம் கொடுத்திடவா
இரவு முழுதும்
உறவு மழையிலே
ஒருவர் உடலும்
நனையும் பொழுதிலே
ஒருவர் கவிதை
ஒருவர் விழியிலே…
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை
நதியோரம் நடந்து......
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
கண்ணா... கண்ணா… கண்ணா…