logo

Arariro Padiyatharo

logo
الكلمات
ஆராரிரோ பாடியதாரோ

தூங்கிப் போனதாரோ

யாரோ யாரோ

எனக்காரோ யாரோ

என் தெய்வமே..

இது பொய் தூக்கமா

நான் தூங்கவே..

இனி நாளாகுமா….

ஆராரிரோ பாடியதாரோ யாரோ...

நீ முந்தி போனது

நியாயம் இல்லையே

நான் முந்தி போகவே

யோகம் இல்லையே

கூட்டை விட்டு தாய்க்கிளி

பறந்தது எங்கே

பசித்தவன் கேட்கிறேன்

பால் சோறு எங்கே

என் தேவியே நான் செய்த

குற்றம் என்ன கூறு

ஒரு பார்வை பாரு

ஆராரிரோ பாடியதாரோ

தூங்கிப் போனதாரோ

யாரோ யாரோ

எனக்காரோ யாரோ

பொழுதாகி போனதே

இன்னும் தூக்கமா

சொல்லாமல் போவது

தாயே நியாயமா

உயிர் தந்த தேவிக்கு

உயிர் இல்லையோ

பால் ஊட்டி பார்த்தியே

பால் ஊத்தலாமோ

அன்னம் போட்ட என் தாயே

உனக்கு அரிசி போட வந்தேன்

எனை நானே நொந்தேன்

ஆராரிரோ பாடியதாரோ

தூங்கிப் போனதாரோ

யாரோ யாரோ

எனக்காரோ யாரோ

என் தெய்வமே..

இது பொய் தூக்கமா..

நான் தூங்கவே..

இனி நாளாகுமா

ஆராரிரோ பாடியதாரோ

தூங்கிப் போனதாரோ

யாரோ யாரோ

எனக்காரோ யாரோ