logo

Nee kaatru (short)

logo
الكلمات
நீ அலை

நான் கரை

என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

நீ உடல்

நான் நிழல்

நீ விழ வேண்டாம் நான் விழுவேன்

நீ கிளை

நான் இலை

உன்னை ஒட்டும் வரைக்கும்

தான் உயிர்த்திருப்பேன்

நீ விழி

நான் இமை

உன்னை சேறும் வரைக்கும்

நான் துடித்திருப்பேன்

நீ ஸ்வாசம்

நான் தேகம்

நான் உன்னை மட்டும்

உயிர்த்திட அனுமதிப்பேன்

நீ காற்று

நான் மரம்

என்ன சொன்னாலும்

தலையாட்டுவேன்