இருளில் நீள் இருளில்
என் நிழலும் மறந்து போனதை
புகையில் கரும் புகையில்
என் புன்னகை இறந்து போனதை
அவனிடம் சொல்வேன் அவனிடம் சொல்வேன்
முழுவதும் சொல்ல போகிறேன்
அவனிடம் செல்வேன் அவனிடம் செல்வேன்
அருகினில் செல்லப்போகிறேன்
தன் இரு குஞ்சுகள்
கொஞ்சிடும் பறவைகள்
கூடுடன் கூடாக
எறிந்த கதை நான் சொல்லவா
என் சிறு தங்கையை
பிணங்களின் குவியலில்
தேடி தேடியே
அலைந்த கதை நான் சொல்லவா
இதயமே இடுகாடாய்
ஆகிடும் போதிலே
கருகிய பூக்களே
கல்லறை மீதிலே
அவனிடம் சொல்வேன் அவனிடம் சொல்வேன்
முழுவதும் சொல்ல போகிறேன்
அவனிடம் செல்வேன் அவனிடம் செல்வேன்
அருகினில் செல்லப்போகிறேன்
இதயமே இடுகாடாய்
ஆகிடும் போதிலே
கருகிய பூக்களே
கல்லறை மீதிலே
கேள்விகள் ஆயிரம்
கேட்பேன் இங்கே யாரிடம்
பிள்ளைகள் கொல்லவா
இத்தனை ஆயுதம்
கண்ணீர் போதுமா
இரத்தம் போதுமா
உயிர்கள் போதுமா
இல்லை இன்னும் வேண்டுமா
நான் பொய்யாகவோ
அவன் மெய்யாகவோ
மாறவேண்டும் என்றே
நான் பொய்யாகவோ
அவன் மெய்யாகவோ
மாறவேண்டும் என்றே
அவனிடம் சொல்வேன் அவனிடம் சொல்வேன்
முழுவதும் சொல்ல போகிறேன்
அவனிடம் செல்வேன் அவனிடம் செல்வேன்
அருகினில் செல்லப்போகிறேன்