logo

Zha Man (Our Soil)

logo
الكلمات
இந்த மண்ணில் இருந்து மண்ணுக்காய்

ரவி ஐயா

பவீனா

சீவி லக்ஸ்

சந்தோச்

தந்தனானே தானே தந்தானே தந்தன்ன தந்தானே

தந்தனானே தானே தந்தானே தந்தன்ன தந்தானே

எங்கள் தாயே எங்கள் தமிழ் மண்ணே

உந்தன் மடியில் நாமே

எங்கள் திடமே எங்கள் உயிர் மூச்சே

என்றும் குன்றா அழகே

எங்கள் தாயே எங்கள் தமிழ் மண்ணே

உந்தன் மடியில் நாமே

எங்கள் திடமே எங்கள் உயிர் மூச்சே

என்றும் குன்றா அழகே

மண்ணுக்குள்ளே உயிரையும் விதைத்துத்தான் உன்னை காத்தோமே

மண்ணுக்குள்ளே உயிரையும் விதைத்துத்தான் உன்னை காத்தோமே

எம்மை உரமாய் உயிராய் தாங்கும் மண்ணே

தந்தனானே தானே தந்தானே தந்தன்ன தந்தானே

தந்தனானே தானே தந்தானே தந்தன்ன தந்தானே

இது நிலம் கொட்டி கிடக்குது இயற்கை வளம்,

பூமித்தாய் வாரி வழங்கிய கொடை தான் எங்கள் நிலம்.

மூலிகை வாசம், பச்சை வயலும், வெயிலில் சிரிக்கும் உப்பளம்,

துள்ளிக்குதிக்கும் மீனினம் தட்டுப்பாடு எதற்கு கடல் வளம்,

திறந்து கிடக்கும் வளத்தை தானே டின்னில் போட்டு அடைக்கிறோம்,

அடைத்து விற்கும் இரசாயனத்தை ருசித்து உடலை அழிக்கிறோம்.

விழித்துப்பார் விழி திறந்து மதி உணர்ந்து மரம் வளர்ப்போம்,

நினைத்துப் பார் மழை இல்லையென்றால் வறண்டு போகும் தேசம்,

கனிய வளமும் காற்றும் கரைந்து போவதை நாம் மறக்கிறோம்,

நவீனம் என்ற போலிக்குள்ளே ஆயுளை நாம் குறைக்கிறோம்,

அடர்ந்த காட்டை அழித்து முடித்து அரிய வளத்தை தொலைப்பதா?

அடுத்த தலைமுறைக்கு நாமும் போலி வாழ்வை திணிப்பதா?

தந்தனானே தானே தந்தானே தந்தன்ன தந்தானே

எங்கள் தாயே எங்கள் தமிழ் மண்ணே உந்தன் மடியில் நாமே

எங்கள் திடமே எங்கள் உயிர் மூச்சே என்றும் குன்றா அழகே

வீரத்துக்கும் தியாகத்துக்கு அர்த்தம் சொன்ன பூமி இது

வாழ்வதற்கும் சாவதற்கும் நாம் கேட்கும் பூமி இது

பல்லாண்டு காலமதாய் நம்மவர் வாழ்ந்த பூமி இது

வந்தோரை வாழவைக்கும் வளம்கொண்ட பூமி இது

எங்கள் இன்பம் அவள் தானே எங்கள் களம் அவள் தானே

எங்கள் நிம்மதி அவள் தானே எங்கள் விடுதலை அவள் தானே

அவள் வெறும் மண் அல்ல எங்கள் மன நிலை ஆவாள்

அவள் வெறும் நிலம் அல்ல எங்கள் நிரந்தரம் ஆவாள்

உரிமைகள் பறித்தாலும் எங்கள் உரிதம் பிழத்தாலும்

உயிரே பிரிந்தாலும் அவளை தந்திட மாட்டோம்

புலத்தில் வாழ்த்தாலும் புலம் பெயர்ந்து சென்றாலும்

பிரிவே வந்தாலும் அவளுக்காய் ஒன்றாய் நின்றிடுவோம்

எங்கள் தாயே எங்கள் தமிழ் மண்ணே

உந்தன் மடியில் நாமே

எங்கள் திடமே எங்கள் உயிர் மூச்சே

என்றும் குன்றா அழகே

மண்ணுக்குள்ளே உயிரையும் விதைத்துத்தான் உன்னை காத்தோமே

மண்ணுக்குள்ளே உயிரையும் விதைத்துத்தான் உன்னை காத்தோமே

எம்மை உரமாய் உயிராய் தாங்கும் மண்ணே

தந்தனானே தானே தந்தானே தந்தன்ன தந்தானே

தந்தனானே தானே தந்தானே தந்தன்ன தந்தானே