logo

Pallangkuzhien Vattam Parthen HQ

logo
الكلمات
பாடகி : ஹரினி

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்

ஒற்றை நாணயம்

புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்

ஒற்றை நாணயம்

துடிக்கும் கண்களில்

கண்மணி பார்த்தேன்

கடிகாரத்தில்

நேரம் பார்த்தேன்

பெண் : செவ்வந்தி பூவில்

நடுவில் பார்த்தேன்

தேசிய கொடியில்

சக்கரம் பார்த்தேன்

இரவில் ஒருநாள்

பௌர்ணமி பார்த்தேன்

ஒற்றை நாணயம்

பெண் : பல்லாங்குழியின்

வட்டம் பார்த்தேன்

ஒற்றை நாணயம்

புல்லாங்குழலின்

துளைகள் பார்த்தேன்

ஒற்றை நாணயம்

பாடகி : ஹரினி

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்

நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்

அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்

எந்தன் அன்பு சேர்ந்திருக்கும்

நெஞ்சில் வைத்து காத்திரு

பெண் : தங்க ஆபரணம்

ஒன்றும் தேவையில்லை

இந்த நாணயம் போதாதா

தழுவும் மனதை குங்கும சிமிழில்

தடுக்க முடியாதா

ஆண் : செல்வ சீதனமே

நீ சிரிக்கையிலே

பல சில்லரை சிதறிவிடும்

செலவு செய்திட நினைத்தால் கூட

இதயம் பதறிவிடும்

பெண் : பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்

ஒற்றை நாணயம்

ஆண் : புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்

ஒற்றை நாணயம்

பாடகி : ஹரினி

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : அட நேற்று நடந்தது நாடகமா

நீ காசு கொடுத்தது சூசகமா

அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு

என்ன சொல்ல காசு தந்தாய்

எண்ணி எண்ணி பார்க்கிறேன்

ஆண் : அடி பேரழகே

உன்னை சேர்ந்திடவே

இந்த நாணயம் ஓர் சாட்சி

இருக்கும் உயிரும் உனக்கே உபயம்

எதற்கு ஆராய்ச்சி

பெண் : இந்த நாணயத்தில்

உன்னை பார்த்திருப்பேன்

பிறர் பார்க்கவும் விட மாட்டேன்

கடவுள் வந்து கேட்டால் கூட

காணிக்கை இட மாட்டேன்

ஆண் : பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்

ஒற்றை நாணயம்

புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்

ஒற்றை நாணயம்

பெண் : துடிக்கும் கண்களில்

கண்மணி பார்த்தேன்

ஆண் : கடிகாரத்தில்

நேரம் பார்த்தேன்

பெண் : செவ்வந்தி பூவில் நடுவில் பார்த்தேன்

தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்

ஆண் : இரவில் ஒருநாள்

பௌர்ணமி பார்த்தேன்

பெண் : ஒற்றை நாணயம்

பாடகி : ஹரினி

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்