யானைப் படை கொண்டு
சேனை பல வென்று
வாழப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு
இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா..
வாழப் பிறந்தாயடா..
அத்தை மகளை மணம் கொண்டு
இளமை வழி கண்டு...
அத்தை மகளை மணம் கொண்டு
இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா..
தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான
மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான
மங்கை உனக்காக...
மாமன் தங்கை மகளான
மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
நதியில் விளையாடி
கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொழிந்த தமிழ் மன்றமே
இணைந்தமைக்கு நன்றி
தமிழுக்கு தொடரவும்