logo

Mundhinam (Short Ver.)

logo
الكلمات
நல்வரவு

துலாத் தட்டில் உன்னை வைத்து

நிகர் செய்ய பொன்னை வைத்தால்

துலாபாரம் தோற்காதோ

பேரழகே..

முகம் பார்த்து பேசும் உன்னை

முதல் காதல் சிந்தும் கண்ணை

அணைக்காமல் போவேனோ

ஆருயிரே..

நிழல் போல விடாமல் உன்னை

தொடர்வேனடி

புகை போல படாமல் பட்டு

நகர்வேனடி

வினா நூறு கனாவும் நூறு

விடை சொல்லடி

முன்தினம் பார்த்தேனே

பார்த்ததும் தோற்றேனே

சல்லடைக் கண்ணாக

உள்ளமும் புண்ணானதே..

இத்தனை நாளாக

உன்னை நான் பாராமல்

எங்குதான் போனேனோ

நாட்களும் வீணானதே

கடல் நீலம் மங்கும் நேரம்

அலை வந்து தீண்டும் தூரம்

மனம் சென்று மூழ்காதோ

ஈரத்திலே

தலை சாய்க்க தோளும் தந்தாய்

விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்

இதழ் மட்டும் இன்னும் ஏன்...

தூரத்திலே...

பகல் நேரம் கனாக்கள் கண்டேன்

உறங்காமலே

உயிர் இரண்டும் உராயக் கண்டேன்

நெருங்காமலே

உனையன்றி எனக்கு ஏது...

எதிர்காலமே

முன்தினம் பார்த்தேனே

பார்த்ததும் தோற்றேனே

சல்லடைக் கண்ணாக

நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக

உன்னை நான் பாராமல்

எங்குதான் போனேனோ

நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா

ஏக்கத்தில் நான் தேய்வதா

இப்போதே என்னோடு வந்தாலென்ன

ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன

இப்போதே என்னோடு வந்தாலென்ன

ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன

வெண்ணிலா

வெண்ணிலா

வெண்ணிலா

Mundhinam (Short Ver.) لـ Naresh Iyer/Prashanthini - الكلمات والمقاطع