M: உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை
உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை
F: தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும்
சுகராகம் முடிவதில்லை
M: உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
F: என் இரு விழியோ ஒரு
கணமும் இமைப்பதில்லை
M: உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
F: தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எதுவரை என்றாலும்
இன்னும் இன்னும்
கொஞ்சம் என்பேனே
உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
M: என் இரு விழியோ ஒரு
கணமும் இமைப்பதில்லை
F: கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
M: ஆடி கலந்து ஆசைகனிந்து
ஆடி கலந்து ஆசைகனிந்து
அளித்திடும் இன்பங்கள்
என்ன என்ன
இன்னும் சொல்வேனோ
உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
F: என் இரு விழியோ ஒரு
கணமும் இமைப்பதில்லை
M: நி த மா ச ரி தா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் தனி நீ
நி த மா ச ரி தா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் தனி நீ
F: பாடும் சுரமோ தேடும் சுகமோ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
எதுவெனச் சொன்னாலும்
இன்பம் இன்பம்
என்னைத் தந்தேனே
உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை
M: தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும்
சுகராகம் முடிவதில்லை
F: உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
M: என் இரு விழியோ ஒரு
கணமும் இமைப்பதில்லை ....