huatong
huatong
avatar

Thalattuthe Vaanam

P. Jayachandran/S. Janakihuatong
KRISH~MANIhuatong
الكلمات
التسجيلات
ஆ: தாலாட்டுதே..

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்

தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்

இது கார்கால சங்கீதம்

தாலாட்டுதே...

ஆ: ஹே. குய்யா குய்யா குய்யா தந்தேலா வாலி

ஹே குய்யா குய்யா குய்யா தந்தேலா வாலம்

குலியா ஏலா வாலே தந்தேலா வாலி

வலையில் தினமும் வந்து ஏலோ..

மீன்கள் மோதுதம்மா ஏலோ..

குலியா குலியா குடிலா குடிலா

குடிலா குடிலா குடிலா குடிலா ...

பெ: அலை மீது ஆடும்

உள்ளம் எங்கும் ஒரே ராகம்

ஆ: நிலை மீறி ஆடும் மீன்கள்

ரெண்டும் ஒரே கோலம்

பெ: மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்

ஆ: கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்

பெ: எண்ணம் ஒரு வேகம்

அதில் உள்ளம் தரும் நாதம்

தாலாட்டுதே...

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்

தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் ஹோய்

இது கார்கால சங்கீதம்..

பெ: இரு கண்கள் மூடி

செல்லும் போதும் ஒரே எண்ணம்

ஆ: ஒரு சங்கில் தானே

பாலை உண்ணும் ஒரே ஜீவன்

பெ: சொர்க்கத்திலே இது முடிவானது

ஆ: சொர்க்கம் என்றே இது முடிவானது

பெ: காதல் ஒரு வேதம் அது

தெய்வம் தரும் கீதம்

ஆ: தாலாட்டுதே..

பெ: தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்

ஆ: தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்

பெ: இது கார்கால சங்கீதம்

இருவரும்: தாலாட்டுதே

المزيد من P. Jayachandran/S. Janaki

عرض الجميعlogo