huatong
huatong
الكلمات
التسجيلات
பெ: அன்பு நடமாடும்

கலைக் கூடமே

ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும்

எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே

அன்பு நடமாடும்

கலைக் கூடமே

ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும்

எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே

ஆ: மாதவிக் கொடிப் பூவின்

இதழோரமே

மயக்கும் மதுச் சா..ரமே.ஏ...

மாதவிக் கொடிப் பூவின்

இதழோரமே..

மயக்கும் மதுச் சா...ரமே

மஞ்சள் வெயில் போலும்

மலர் வண்ண முகமே

மன்னர் குலத் தங்கமே

பச்சை மலைத் தோட்ட

மணியா....ரமே

பாடும் புது ரா....கமே

அன்பு நடமாடும்

கலைக் கூடமே..ஏ...

ஆசை மழை மேகமே..

பெ: கண்ணில் விளையாடும்

எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே

பெ: வெள்ளலை கடலாடும்

பொன்னோடமே

விளக்கின் ஒளி வெள்ளமே... ஏ...

வெள்ளலை கடலாடும்

பொன்னோடமே

விளக்கின் ஒளி வெள்ளமே...

செல்லும் இடம் தோறும்

புகழ் சேர்க்கும் தவமே

தென்னர் குல மன்னனே..ஏ...

ஆ: இன்று கவி பாடும்

என் செல்வமே

என்றும் என் தெய்வமே…

அன்பு நடமாடும்

கலைக் கூடமே

ஆசை மழை மேகமே..

பெ: கண்ணில் விளையாடும்

எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே..

ஆ: மாநிலம் எல்லாமும்

நம் இல்லமே

மக்கள் நம் சொந்தமே..

பெ: காணும் நிலமெங்கும்

தமிழ் பாடும் மனமே

உலகம் நமதாகுமே..ஏ..

ஆ: அன்று கவி வேந்தன்

சொல் வண்ணமே

யாவும் உறவாகுமே..

அன்பு நடமாடும்

கலைக் கூடமே

ஆசை மழை மேகமே..

பெ: கண்ணில் விளையாடும்

எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே..

المزيد من P. Susheela/T. M. Soundararajan

عرض الجميعlogo