logo

காலையில் தினமும்(Short)

logo
الكلمات
நிறை மாத நிலவே வா வா

நடை போடு மெதுவா மெதுவா

அழகே உன் பாடு

அறிவேன் அம்மா

மசக்கைகள் மயக்கம் கொண்டு

மடி சாயும் வாழை தண்டு

சுமயல்ல பாரம்

சுகம் தான் அம்மா

தாயான பின்பு தான் நீ பெண்மணி

தோள் மீது தூங்கடி

கண்மணி கண்மணி

காலையில் தினமும் கண் விழித்தால் நான்

கை தொழும் தேவதை அம்மா

அன்பென்றாலே அம்மா

என் தாய் போல் ஆகிடுமா?

இமை போல் இரவும் பகலும்

எனைக் காத்த அன்னையே

உனதன்பு பார்த்த பின்பு

அதை விட

வானம் பூமி யாவும் சிறியது

Humming

Humming

Humming

ஒரு பிள்ளை கருவில் கொண்டு

ஒரு பிள்ளை கையில் கொண்டு

உறவாடும் யோகம் ஒரு தாய்க்கின்று

மழலை போல் உந்தன் நெஞ்சம்

உறங்கட்டும் பாவம் கொஞ்சம்

தாய்க்கு பின் தாரம் நான்தானேயா

தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா

தாயாக்கி வைத்ததே

நீயடா நீ..யடா

தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை

பாடுகிறேன் நான் தாலோ

பனிசே பூ விழி தாலோ

பொன்மணி தாலேலோ

நிலவோ நிலத்தில் இறங்கி

உனைக் கொஞ்ச என்னுதே

அதிகாலை சேவல் கூவும்

அதுவரை

வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு..