logo

Kannaale Pesi Pesi

logo
الكلمات
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே

காதல் தெய்வீக ராணி

போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே

காதல் தெய்வீக ராணி

போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே உன்

பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே

ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே என்

அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே

காதல் தெய்வீக ராணி

போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

பதுமை போல காணும் உந்தன் அழகிலே

நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே

மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே

என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே

காதல் தெய்வீக ராணி

போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே

காதல் தெய்வீக ராணி

போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

Kannaale Pesi Pesi لـ Pb Sreenivas - الكلمات والمقاطع