logo

Nenthukitta Nerthikadan Theerthuputten

logo
avatar
prabulogo
👉Pattasu_Balu😎😎😎logo
الغناء في التطبيق
الكلمات
👉Pattasu_Balu😎😎😎

நேந்துகிட்ட நேர்த்திக்கடன்

தீத்துப்புட்டேன் அய்யனாரே நீ

படைச்ச சக்தியைத்தான்

பாத்துப்புட்டேன் அய்யனாரே

தங்கமணி முத்துமணி போலே

ஒரு பிள்ளை பொறப்பான்

வைரமணி வெள்ளிமணி போலே

இரு கண்ண தொறப்பான்

பொங்க வச்சி பூசை வச்சி

உங்களுக்கு பாட்டு படிப்போம்

நேந்துகிட்ட நேர்த்திக்கடன்

தீத்துப்புட்டேன் அய்யனாரே நீ

படைச்ச சக்தியைத்தான்

பாத்துப்புட்டேன் அய்யனாரே

வண்ண மயில் சின்ன மயில்

வந்த நல்ல தங்க மயில்

தாலாட்டப் பாலூட்டத் தாயாகத்தான் ஆனா

ஹான்..அச்சடித்த சித்திரமா முத்து நவரத்தினமா

ஆண்பிள்ளை கைகாட்டும் பத்து திங்கள் போனா

அப்பனோட சொப்பனந்தான்

அய்யனாரே ஒன்னாலதான்

பூவாகி பிஞ்சாகி காயாகும் நேரம்

கொண்டாட்டம் போட ஒரு கூட்டம் வந்து சேரும்

ஒரு மேளம் கொட்டத்தான்

அதில் தாளம் தட்டத்தான்

புது பாட்டு பாடத்தான்

புலி ஆட்டம் போடத்தான் வந்த

சந்தோஷத்தை என்ன சொல்லுவேன் நான்

நேந்துகிட்ட நேர்த்திக்கடன்

தீத்துப்புட்டேன் அய்யனாரே நீ

படைச்ச சக்தியைத்தான்

பாத்துப்புட்டேன் அய்யனாரே

தங்கமணி முத்துமணி போலே

ஒரு பிள்ளை பொறப்பான்

வைரமணி வெள்ளிமணி போலே

இரு கண்ண தொறப்பான்

பொங்க வச்சி பூசை வச்சி

உங்களுக்கு பாட்டு படிப்போம்

நேந்துகிட்ட நேர்த்திக்கடன்

தீத்துப்புட்டேன் அய்யனாரே நீ

படைச்ச சக்தியைத்தான்

பாத்துப்புட்டேன் அய்யனாரே

என்னுடைய பேரை சொல்ல

பட்டி தொட்டி ஊரை வெல்ல

வீராதி வீரன் போல் பிள்ளை வரப்போறான் ஹகாஹக

அடடட மல்லுசண்டை வில்லு சண்டை

குத்துசண்டை கத்திசண்டை

எல்லாமே எங்கிட்ட கத்துக்கத்தான் வாறான்

பாக்குறப்போ தங்கக்கட்டி

பாயுறப்போ சிங்கக்குட்டி

ஊராரும் வேறாரும் பாராட்ட வேணும்

தேசிங்கு ராசா என சொல்லிடத்தான் தோணும்

ஒரு வெள்ளி ரதம் போல்

பய துள்ளி குதிப்பான்

குளிர் வட்ட நிலவா கைய கொட்டி சிரிப்பான்

ரெண்டு கையாலதான் அள்ளி கொள்வேன் நான்

நேந்துகிட்ட நேர்த்திக்கடன்

தீத்துப்புட்டேன் அய்யனாரே நீ

படைச்ச சக்தியைத்தான்

பாத்துப்புட்டேன் அய்யனாரே

தங்கமணி முத்துமணி போலே

ஒரு பிள்ளை பொறப்பான்

வைரமணி வெள்ளிமணி போலே

இரு கண்ண தொறப்பான்

பொங்க வச்சி பூசை வச்சி

உங்களுக்கு பாட்டு படிப்போம்

நேந்துகிட்ட நேர்த்திக்கடன்

தீத்துப்புட்டேன் அய்யனாரே நீ

படைச்ச சக்தியைத்தான்

பாத்துப்புட்டேன் அய்யனாரே ......

Nenthukitta Nerthikadan Theerthuputten لـ prabu - الكلمات والمقاطع