ஓ மூட்ட மூட்ட முட்டையோட சக்கரகாரி பறக்குறா பாரு
ஓ ஆட்ட ஆட்ட ஆட்டைய போட்டு சக்கரகாரி பறக்குறா பாரு
சிறுக்கி தாவி குதிச்சிட்டு போறா ஜிமிக்கி குலுங்க சிரிச்சுட்டு போறா
காத்த ரெண்டா கிழிச்சுட்டு போறா மனச பூவா பரிச்சிட்டு போறா
கிட்ட வந்து காதுல கீச்சு கீச்சு போறா போறா
சாக்கலேட்ட சாக்குல கட்டி ராக்கெட்டா போறா போறா
இதமான பார்வைய வீசி சக்கரகாரி பறக்குறா பாரு
ஓ புயல போலொரு முயல நீ பாரு
வெயில போலொரு மயில நீ பாரு
ஒரு கண்ணுல கோவத்த ஊத்தி மறு கண்ணுல அழகுல சாத்தி
துள்ளி கிட்டு துள்ளி கிட்டு மான் கணக்கா
மனசல்லிக்கிட்டு அல்லிக்கிட்டு போறதெங்க
பொத்து கிட்டு பொத்து கிட்டு வா தொறக்க
இவ ரெக்ககட்டி ரெக்ககட்டி போறதெங்க
காலு ரெண்டில் சக்கரம் கட்டி சக்கரகாரி பறக்குறா பாரு
உன்ன தொரத்தி புடிச்சிட்டு பாத்து மூச்சு வாங்கி நின்னேனே
கள்ளி நீயும் வீசுற காத்து பேர எல்லாம் சொன்னேனே
ஏ அடைச்சு வைக்க புடிச்சு வைக்க இலைக்கு கூட முடியாதே
எதுக்கு வந்தா எதுக்கு போறா எதுவும் எனக்கு தெரியாதே
மொய்க்கிற வண்டா ஏய்க்கிற மாறி சக்கரகாரி பறக்குறா பாரு
மேகம் உடுத்திய மின்மினி தானா வண்ணம் உடுத்திய வெண்பனி தானா
யாரு யாரு இந்த சக்கரகாரி யார்
விக்கல் மறந்திடும் செங்கிலி தானா ரெக்கை விரித்திடும் பொன்னொளி தானா
யாரு யாரு இந்த சக்கரகாரி யார்
முன்னக பேயும் விண்வெளி தானா மந்திரம் செய்யும் மைவிழி தானா
யாரு யாரு இந்த சக்கரகாரி யார்
மின்னும் மின்னலின் தங்கையே தானா
விண்மீன் தாழ்த்திய மங்கையும் தானா
யாரு யாரு இந்த சக்கரகாரி யார்
காண்பது எல்லாம் மைவிழி தானா
வான் விட்டு மண் வந்த தேவதை தானா
யாரு யாரு இந்த சக்கரகாரி யார்
உலக அழகுல ஓவியம் தீட்டி சக்கரகாரி இருக்கிறா பாரு
ஓ வாழும் ஆச காரணம் ஒன்ன சக்கரகாரி குடுக்குறா பாரு