சலனா சலனா
நெஞ்சில் சலசலத்தாய்
சில நாள் சில நாள்
எனக்குயிர் கொடுத்தாய்
உன் போல என்னை யாரும்
பார்த்ததில்லை
வாய்விட்டு சொல்வேன் ஆனால்
வார்த்தையில்லை
நான் ஒன்றும் மீனுக்கெங்கும்
நாரை இல்லை
நீ ஒன்றும் ஈரம் இல்லா
பாறை இல்லை
சலனா சலனா
நெஞ்சில் சலசலத்தாய்
சில நாள் சில நாள்
எனக்குயிர் கொடுத்தாய்
சலனா சலனா
எனில் சிறகடித்தாய்
சிறிதாய் சிறிதாய்
எனை சிறைபிடித்தாய்
கல் வீசி போனாய்
நீர் மட்டம் கொண்டேன்
சொல் வீசி போனாய்
நான் வற்றிபோனேன்
உன் கால்கள் தந்தாய்
என் மீன்கள் கொஞ்ச
நீ முத்தம் வேண்டும்
என் நெஞ்சம் கெஞ்ச
என்னென்னவோ செய்து பார்த்தேன்
தலைகீழாய் நின்று கேட்டேன்
என் காதலை ஏற்றுக்கொண்டால்
உன்னை போலே உன்னை பார்த்துக்கொள்வேன்
உன் போல என்னை யாரும்
பார்த்ததில்லை
வாய்விட்டு சொல்வேன் ஆனால்
வார்த்தையில்லை
நான் ஒன்றும் மீனுக்கெங்கும்
நாரை இல்லை
நீ ஒன்றும் ஈரம் இல்லா
பாறை இல்லை
சலனா சலனா
நெஞ்சில் சலசலத்தாய்
சில நாள் சில நாள்
எனக்குயிர் கொடுத்தாய்
சலனா சலனா
எனில் சிறகடித்தாய்
சிறிதாய் சிறிதாய்
எனை சிறைபிடித்தாய்