logo

Kadhal Maharani

logo
الكلمات
ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ: காதல் மகராணி

கவிதை பூ விரித்தாள்

புது கவிதை பூ விரித்து

கனவில் தேன் தெளித்தாள்

முத்துப்போல் சிரித்தாள்

மொட்டுப்போல் மலர்ந்தாள்

விழியால் இவள்

கணை தொடுத்தாள்

இந்த காதல் மகராணி

கவிதை பூ விரித்தாள்

புது கவிதை பூ விரித்து

கனவில் தேன் தெளித்தாள்

ஆ: பூவை நீ பூ மடல்

பூவுடல் தேன் கடல்

தேன் கடலில் தினமே

குளித்தால் மகிழ்வேன்...

பெ: மான் விழி ஏங்குது

மையலும் ஏறுது

பூங்கொடியை பனிபோல்

மெதுவாய் தழுவு...

ஆ: கண்ணே உந்தன் கூந்தல் ஓரம்

கண்கள் மூடி தூங்கும் நேரம்

பெ: இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும்

உள்ளம் போகும் ஊர்வலம்

ஆ: காதல் மகராணி

கவிதை பூ விரித்தாள்

பஞ்சணை கூடத்தில்

பால் நிலா காயுதே

நான் என்னையே மறந்தேன்

கனவில் மிதந்தேன்...

ஆ: உன் முக தீபத்தில்

ஓவியம் மின்னுதே

உன் அழகால் இரவை

பகலாய் அறிந்தேன்...

பெ: மண்ணில் உள்ள இன்பம் யாவும்

இங்கே இன்று நாமும் காண்போம்

ஆ: அன்பே அந்த தேவலோக

சொர்க்கம் இங்கே தேடுவோம்

பெ: காதல் யுவராஜா

கவிதை பூ விரித்தான்

புது கவிதை பூ விரித்து

கனவில் தேன் தெளித்தான்

முத்துப்போல் எடுத்தான்

தொட்டுத்தான் அணைத்தான்

விழியால் இவன்

கணை தொடுத்தான்

இந்த காதல் யுவராஜா

கவிதை பூ விரித்தான்

ஆ: புது கவிதை பூ விரித்து

கனவில் தேன் தெளித்தாள்