logo

Yennai Thalaathum

logo
الكلمات
நதியாக நீயும் இருந்தாலே நானும்

நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்

இரவாக நீயும் நிலவாக நானும்

நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்

முதல் நாள் என் மனதில்

விதையாய் நீ இருந்தாய்

மறுநாள் பார்கையிலே

வனமாய் மாறிவிட்டாய்

நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்

நெஞ்சில் நீ வாழ்கிறாய்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா

உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்

எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே

ஆகாயம் ஓர்நாள் விடியாமல் போனால்

எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே

அன்பே நான் இருந்தேன்

வெள்ளை காகிதமாய்

என்னில் நீ வந்தாய்

பேசும் ஓவியமாய்

தீபம் நீயென்றால் அதில் நானே திரி ஆகிறேன்

தினம் திரியாகிறேன்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா

உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா

உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா

அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா

உன்னை நான் என்பதா

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா

உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா

Yennai Thalaathum لـ Sirpy/Sujatha - الكلمات والمقاطع