huatong
huatong
avatar

Aalappol Velappol

Spb/KS Chitrahuatong
lixuemei3huatong
الكلمات
التسجيلات
பெண் : ஆலப்போல் வேலப்போல்

ஆலம் விழுது போல்

மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

நாலுப் போல் ரெண்ட போல

நாளும் பொழுதுப் போல்

நானும் அங்கு நின்று இருப்பேனே

பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ..ஆ...

நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா

என்னம்மா கண்ணம்மா ஹோய்

பெண் : ஆலப்போல் வேலப்போல்

ஆலம் விழுது போல்

மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : எம்மனச மாமனுக்கு

பத்திரமா கொண்டு செல்லு

இன்னும் என்ன வேணுமுன்னு

உத்தரவு போடச் சொல்லு

ஆண் : கொத்து மஞ்சள் தான் அரைச்சி

நித்தமும் நீராடச் சொல்லு

மீனாட்சிக் குங்குமத்தை...

நெத்தியிலே சூடச் சொல்லு

பெண் : சொன்னத நானும் கேட்குறேன்

சொர்ணமே அங்கபோய் கூறிடு

ஆண் : அஞ்சல மாலை போடுறேன்

அன்னத்தின் காதுல ஓதிடு

பெண் : மாமன் நெனைப்புத்தான்

மாசக்கணக்கிலே பாடா படுத்துது

என்னையே புது பூவா வெடிச்ச பின்னையே

ஆண் : ஆலப்போல் வேலப்போல்

ஆலம் விழுது போல்

ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : நாலுப் போல் ரெண்ட

போல நாளும் பொழுதுப் போல்

நானும் அங்கு நின்று இருப்பேனே

ஆண் : வேலங்குச்சி நான் வளைச்சி

வில்லுவண்டி செய்ஞ்சி தாறேன்

வண்டியிலே வஞ்சி வந்தா

வளைச்சி கட்டி கொஞ்ச வார்றேன்

பெண் : ஆலங்குச்சி நான் வளைச்சி

பல்லக்கொன்னு செய்ஞ்சித்தார்றேன்

பல்லக்குல மாமன் வந்தா பகல்

முடிஞ்சி கொஞ்ச வார்றேன்

ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா

கொல்லுதே கொல்லுதே ராத்திரி

பெண் : கட்டிலில் போடும் பாயும்

தான் குத்துதே குத்துஊசி மாதிரி

ஆண் : ஊரும் உறங்கட்டும் ஒசை அடங்கட்டும்

காத்தா பறந்து வருவவேன்

புதுபாட்டா படிச்சி தருவேன்

பெண் : ஆலப்போல் வேலப்போல்

ஆலம் விழுது போல்

மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

நாலுப் போல் ரெண்ட போல

நாளும் பொழுதுப் போல்

நானும் அங்கு நின்று இருப்பேனே

ஆண் : பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ...

நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா

என்னம்மா கண்ணம்மா ஹோய்

ஆண் : ஆலப்போல் வேலப்போல்

ஆலம் விழுது போல்

ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : நாலுப் போல் ரெண்ட

போல நாளும் பொழுதுப் போல்

நானும் அங்கு நின்று இருப்பேனே

المزيد من Spb/KS Chitra

عرض الجميعlogo