logo

Ilaya Nila Pozhigirathe

logo
الكلمات
இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம்

கனாக் காணுமே

விழாக் காணுமே வானமே .....

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம் கனாக் காணுமே

விழாக் காணுமே வானமே .....

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனி மழையில்

பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்

பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும்

வானவீதியில் மேக ஊர்வலம்

காணும் போதிலே ஆறுதல் தரும்

பருவ மகள் விழிகளிலே கனவு வரும் ..

இளைய நிலா பொழிகிறதே

உலாப் போகும் மேகம் கனாக் காணுமே

விழாக் காணுமே வானமே .....

இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே

முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே

முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ

நீலவானிலே வெள்ளி ஓடைகள்

போடுகின்றதே என்ன ஜாடைகள்

விண்வெளியில் விதைத்தது

யார் நவமணிகள்.....

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம் கனாக் காணுமே

விழாக் காணுமே வானமே .....

இளைய நிலா பொழிகிறதே,,?

பருவ மகள் விழிகளிலே

கனவு வரும் by நிஸா