logo

Maanikka Theril Marakatha Kalasam

logo
الكلمات
பாடல் தலைப்பு மாணிக்கத்

தேரில் மரகதக் கலசம்

திரைப்படம் தேடி வந்த மாப்பிள்ளை

கதாநாயகன் எம்.ஜி.ஆர்

கதாநாயகி ஜெயலலிதா

பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன் P.சுசீலா

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடலாசிரியர் கண்ணதாசன்

வெளியானஆண்டு

பெ. ஆ ஹாஹா... ஆ ஹாஹா...

ஆண். மாணிக்கத் தேரில் மரகத கலசம்

மின்னுவதென்ன. என்ன

பெ. மன்னன் முகம் கனவில் வந்தது

மஞ்சள் நதி உடலில் வந்தது

( இசை )

ஆண். மாணிக்கத் தேரில் மரகத கலசம்

மின்னுவதென்ன என்ன

.மன்னன் முகம் கனவில் வந்தது

மஞ்சள் நதி உடலில் வந்தது

.ராணி உந்தன் மேனி என்ன

ராஜ வீதித் தோற்றம் தானோ

ராணி உந்தன் மேனி என்ன

ராஜ வீதித் தோற்றம் தானோ

கேள்வி கேட்ட மன்னன் மேனி

தேவன் கோவில் தோற்றம் தானோ

கேள்வி கேட்ட மன்னன் மேனி

தேவன் கோவில் தோற்றம் தானோ

மாணிக்கத் தேரில் மரகத கலசம்

மின்னுவதென்ன

.என்ன

.மன்னன் முகம் கனவில் வந்தது

மஞ்சள் நதி உடலில் வந்தது

. வெண் பட்டு மேனியில்

கண் படும் வேளையில்

மூடுது மேலாடை

. கண் படும் வேளையில் கை படுமோ என்று

கலங்குது நூலாடை

இடை படும் பாடோ சதிராட்டம்

பெ. இலைகளில் ஆடும் கனியாட்டம்

கண்ணோட்டம்

. என் தோட்டம்

.. மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்

மின்னுவதென்ன என்ன

. மன்னன் முகம் கனவில் வந்தது

மஞ்சள் நதி உடலில் வந்தது

. தென் மலை மேகங்கள் பொன் வலை போட்டன

கூந்தலில் நீராட

.மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும்

மிதப்பது யாராட

புது மழை போலே நீரோட

.அதிசய நதியில் நானாட

.நீ ஆட

.ஆஹா தேனோட

.மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்

மின்னுவதென்ன

. என்ன மன்னன் முகம் கனவில் வந்தது

மஞ்சள் நதி உடலில் வந்தது

. ஓ... ஓ...

ஆ... ஆ...

.ஓ... ஓ...

. ஆ... ஆ...

Maanikka Theril Marakatha Kalasam لـ Tm Soundararajan/P. Susheela - الكلمات والمقاطع