huatong
huatong
avatar

Mainave Mainave

Unni Menon/K. S. Chithrahuatong
shalom_medinahuatong
الكلمات
التسجيلات
ஆண் : மைனாவே மைனாவே

இது என்ன மாயம்

மழை இல்லை நனைகின்றேன்

இது என்ன மாயம்

நேற்று பார்த்த பார்வையோ

பாலை வார்த்து போனது

இன்று பார்த்த பார்வையோ

மாலை மாற்றி போனது

காதல் என்பதா

இதை மாயம் என்பதா

காதல் என்பதா

இதை மாயம் என்பதா

பெண் : மைனாவே மைனாவே

இது என்ன மாயம்

மழை இல்லை நனைகின்றேன்

இது என்ன மாயம்

ஆண் : நதி கரை மணல் மீது

உன் பெயர் நான் எழுத

மணல் எல்லாம்

பொன்னாய் போன மாயம் என்ன

பெண் : மூங்கில் காட்டில் உன் பேரை

சொல்லி பார்த்தேன் சுகமாக

மூங்கில்கள் குழலான மாயம் என்ன

ஆண் : நூலும் இல்லை காற்றும் இல்லை

வானில் பறக்கும் பட்டம் ஆனேன்

பெண் : இந்த சந்தோச மாயங்கள்

இன்னும் என்ன

ஆண் : மைனாவே மைனாவே

இது என்ன மாயம்

பெண் : மழை இல்லை நனைகின்றேன்

இது என்ன மாயம்

பெண் : அம்புவிடும் ஒரு வேடன்

கண்கள் பட்டு துடிக்கின்றான்

மான் ஒன்று வேட்டை ஆடும் மாயம் என்ன

ஆண் : பஞ்சை போல இருக்கின்றாய்

தீயை பற்ற வைக்கின்றாய்

மீன் ஒன்று தூண்டில் போடும் மாயம் என்ன

பெண் : மேகம் ஒன்று வலையை வீச

வானம் வந்து சிறையில் சிக்க

ஆண் : இந்த சந்தோச மாயங்கள்

இன்னும் என்ன

பெண் : மைனாவே மைனாவே

இது என்ன மாயம்

ஆண் : மழை இல்லை நனைகின்றேன்

இது என்ன மாயம்

பெண் : நேற்று பார்த்த பார்வையோ

பாலை வார்த்து போனது

ஆண் : இன்று பார்த்த பார்வையோ

மாலை மாற்றி போனது

பெண் : காதல் என்பதா

இதை மாயம் என்பதா

ஆண் : காதல் என்பதா

இதை மாயம் என்பதா

பெண் : மைனாவே மைனாவே

இது என்ன மாயம்

ஆண் : மழை இல்லை நனைகின்றேன்

இது என்ன மாயம்

இந்த அருமையான பாடலை பதிவு செய்தவர் உங்களின் நண்பன் ஈஸ்வரன் (23/04/2022)

المزيد من Unni Menon/K. S. Chithra

عرض الجميعlogo