logo

ore naal unai naan nilavil parthathu

logo
الكلمات
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

மங்கைக்குள் காதலெனும்

கங்கைக்குள் நான் மிதக்க

மங்கைக்குள் காதலெனும்

கங்கைக்குள் நான் மிதக்க

சங்கமங்களில் இடம் பெரும்

சம்பவங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

ஒரே நாள் உனை நான்

நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான்

ஊஞ்சலாடுது

நெஞ்சத்தில் பேர் எழுதி

கண்ணுக்குள் நான் படித்தேன்

நெஞ்சத்தில் பேர் எழுதி

கண்ணுக்குள் நான் படித்தேன்

கற்பனைகளில் சுகம் சுகம்

கண்டதென்னவோ நிதம் நிதம்

மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஆ ஆ ஆ

ர ர ர ர ர ல ல ல ல ல ல

ர ர ர ர ல ல ல ல ல ல

ர ர ர ர ர ல ல ல ல ல

ர ர ர ர

பஞ்சணைப் பாடலுக்கு

பல்லவி நீ இருக்க

கண்ணிரெண்டிலும் ஒரே ஸ்வரம்

கையிரெண்டிலும் ஒரே லயம்

இரவும் பகலும் இசை முழங்க

ஒரே நாள் ……..

உனை நான் ……….

நிலாவில் பார்த்தது

உலாவும்

உன் இளமைதான்

ஊஞ்சலாடுது

ஊஞ்சலாடுது …

அஹ அஹ அஹ ஆஹா