அடி நியூட்டன் ஆப்பிள் விழ,
புவி ஈர்ப்பை கண்டானடி!
இன்று நானும் உன்னில் விழ
, விழி ஈர்ப்பை கண்டேனடி!
ஓசை கேட்காமலே , இசை அமைத்தான் பீதோவனே
நீ என்னை கேட்காமலே ,
எனை காதல் செய் நண்பனே
உத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே
குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே
மேலும் மேலும் அழகாய் மாறி போனனேன் நானே
எல்லே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா?
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
சந்தோஷமா வெள்ளம் அல்லுமா?
என் ஜன்னல் கதவிலே..
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே...
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க