menu-iconlogo
logo

Aande Nootrande upload by Basha

logo
লিরিক্স
Song upload by

Basha

Happy singing

ஆண்டே நூற்றாண்டே

உண்டாகும் நூற்றாண்டே

வையகம் வாழ விடு

எங்கள் வாசலில் கோலம் இடு

வெப்பம் இல்லாமல்

சுக வெளிச்சம் நீ தர வா

வெள்ளம் இல்லாமல்

மழை மேகம் நீ தர வா

அலைகள் இல்லாமல்

மேக செதுக்கல் நீ தரவா

இரைச்சல் இல்லாமல்

காதில் இன்னிசை நீ தரவா

நிலவுக்கு போய் வரவே

எங்கள் செல்லுக்கு சிறகு கொடு

ஒவ்வொரு விடியலிலும்

நெஞ்சில் உழைக்கின்ற வலிமை கொடு

Happy singing

Song upload by Basha

நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள்

எல்லாம் கலைவாயா

அழுக்கில்லாத காற்றும் நீரும்

அகிலம் முழுதும் தருவாயா

பெட்ரோலும் தீர்ந்துவிட்டால்

கற்காலம் தருவாயா

பொன்னான வாகனம் ஓடும்

பொற்காலம் தருவாயா

ஒரே நிழல் ஒரே நிஜம்

நீ கொண்டு வா நீ கொண்டு வா

ஒரே பகல் ஒரே நிலை

நீ கொண்டு வா நீ கொண்டு வா

பொய்யே பேசாத

புத்துலகம் நீ கொண்டு வா

பசி இல்லா பொய் சொல்லாத

புது உலகம் நீ கொண்டு வா

ஒரு பூகம்பம் எங்கும் நேராத

அனல் பூமியை நீ கொண்டு வா

இல்லறத்தில் பெண்களுக்கு

இன்பநிலை தருவாயா

சமையல் அறை வழிந்த வீடுகள்

தாய்மாருக்கெல்லாம் தருவாயா

பொதி சுமக்கும் குழந்தைகளின்

புத்தகங்கள் குறைப்பாயா

பரீட்சையின்றி கல்வியும் வேண்டும்

பாடத்திட்டம் தருவாயா

ஒரே மொழி ஒரே நீதி

நீ கொண்டு வா நீ கொண்டு வா

ஒரே நிழல் ஒரே விழா

நீ கொண்டு வா நீ கொண்டு வா

போரே இல்லாத பொன் உலகம்

நீ கொண்டு வா

தமிழ் சாகாமல் மனம் பார்க்கின்ற

அந்த காதல் நீ கொண்டு வா

இசை கேக்காமல் கண் துகிலாத

அட உலகம் நீ கொண்டு வா

புத்தம் புது ஆண்டே

தேன் பூக்கும் நூற்றாண்டே

பூக்கள் நீ தரவா

தேன் புன்னகை நீ தரவா

போர்க்களம் நுழைந்துவிடு

அங்கே பூச்செடி நட்டுவிடு

அணுகுண்டு அத்தனையும்

பசிபிக் கடலில் கொட்டிவிடு

மனிதர்கள் விரும்பும்வரை

மண்ணில் மனிதரை வாழவிடு

மருத்துவம் இல்லாமல்

எங்கள் மானுடம் வாழவிடு

நிலவுக்கும் போய் வரவே

எங்கள் செல்லுக்கு சிறகு கொடு

ஒவ்வொரு விடியலிலும்

நெஞ்சை உலகுக்கு வலிமை கொடு

Thank u all

Happy singing

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️