சொல்லாமலே சொல்லாமலே
உன் கண்கள் என் மீது கல் வீசுதே
சொல்லாமலே சொல்லாமலே
என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே
சலசலக்கும் நீரும் நீயே
படபடக்கும் தீயும் நீயே
எதிரில் வரும் என்னை ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய்
குறும்பு விழியாலே குடை சாய்த்து நீ போகின்றாய்
சொல்லாமலே சொல்லாமலே
உன் கண்கள் என் மீது கல் வீசுதே
எங்கேயோ பார்த்தது போலே
என் மனம் சொல்லுது உன்னை
காலமும் காதலும் குழப்பம்தானோ
பாவமாய் பாவனை காட்டும்
திமிரு உன் தாவணி தோற்றம்
நம்புதே நம்புதே நெஞ்சம் ஏனோ
உண்மத்தமாய் நான் நிற்பது உன்னாலேதானோ
சொல்லாமலே சொல்லாமலே
உன் கண்கள் என் மீது கல் வீசுதே
பார்த்ததும் புயலாய் தோன்றும்
தென்றல் நீ தேவதை அம்சம்
எண்ணிலே என்னவோ மாயம் செய்தாய்
வார்த்தைகள் ஆயிரம் உண்டு
ஆயினும் மௌனம் கொண்டு
மனதை நீ முடினாய் ஏனோ இன்று
ஓர் வார்த்தையில் உன் வாழ்க்கையில்
ஓரிடம் தாயேன்
சலசலக்கும் நீரும் நீயே
படபடக்கும் தீயும் நீயே
எதிரில் வரும் என்னை ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய்
குறும்பு விழியாலே குடை சாய்த்து நீ போகின்றாய்
சொல்லாமலே சொல்லாமலே
உன் கண்கள் என் மீது கல் வீசுதே
சொல்லாமலே சொல்லாமலே
என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே