menu-iconlogo
logo

Idhuvarai Yarum

logo
লিরিক্স
கண்ணும் மண்ணும் தெரியாமல்

எங்கெங்கோ நானும் ஓடுகிறேன்! - உன்

சொற்கள் இரண்டு என்னை உருட்ட

ஓடிக்கொண்டே பாடுகிறேன்!

சட்டென நூல் அறுபட்ட ஒரு

காற்றாடியின் நிலை அது என் நிலையோ?

ஹே அடுத்து எங்கே தெரியாத

ஒரு புயலின் நிலை அது என் நிலையோ!

வழியில் உள்ளப் பூமரமெல்லாம்

பூக்கள் பிடுங்கி வருவேனா?

என் எதிரே பெண்ணே! உன்னைக் கண்டால்

உந்தன் கையில் தருவேனா?

இதுவரை யாரும் செய்யாததை

இன்று வந்தவள் நிகழ்த்துகிறாய்!

ஓராயிரம் குதிரைகள் வேகத்தினை

என் ஒருவனுக்குள்ளே புகுத்துகிறாய்!

அதே சாலை தான்

அதே கூட்டம் தான்

வானம் பூமி காற்று இன்றி பறக்கின்றேன் நான்

அதே பூக்கள், அதே பறவை, அதே தனிமை தான்

ஆனால் வேரு வாசம் வேறு சப்தம் வேறு முகம்தான்

இதுவரை யாரும் செய்யாததை

இன்று வந்தவன் செய்துவிட்டான்!

ஓராயிரம் வயலினின் சிம்ஃபனியை

என் இதயத்தின் உள்ளே நிகழ்த்திவிட்டான்!

சூமோ வீரன் உடலுக்குள்ளே

சூப்பர் மேனின் ஆவி போலே

நகராமலே கிடந்த நானும்

காதல் வந்துப் பறக்கிறேனே

பெற்றோர் பற்றிய நினைவுகளோ

காதல் வந்ததும் மறைகிறதே!

பெட்ரோல் ஊற்றிய பறவையை போலே

நெஞ்சம் காற்றில் விரைகிறதே!

ஓடும் எந்தன் வேகம் கண்டு

ஒளியும் கொஞ்சம் பயந்து நிற்கும்

ஒலிம்பிக்கில் நான் கலந்திருந்தால்

நாடோ தங்கம் வென்றிருக்கும்

எந்தன் பிம்பமோ என்னை விட

அழகாய் இன்று மாறியதேன்?

யாரும் பார்த்திடா போதினிலே

ஆட்டம் போடத் தோன்றுவதேன்?