வால்பாறை வட்டப்பாறை.
மயிலாடும் பாறை மஞ்சப்பாறை
நந்திப்பாறை சந்திப்பாக
அவக என்னை மட்டும் சிந்திப்பாக
பாறை என்ன பாறை
எட்டிப்பார்த்து நிப்பாக
ஏங்கி ஏங்கி பார்ப்பாக
ஏரிக்கரை ஓரத்துல காத்திருப்பாக
ரெண்டு கன்னம் தேம்பாக
விண்டு விண்டு திம்பாக (வால்பாறை)
செம்பெருத்தி நெஞ்சார சம்மதத்தை கேப்பாக
சாதி சனம் சேர்ந்திருக்க கைப்பிடிப்பாக
வம்பளுக்கும் ஊர்வாயை
வாயடைக்க வைப்பாக (வால்பாறை)
தொட்டா மணப்பாக
நெய்முறுக்கு கேப்பாக
நெய்முறுக்கு சாக்கிலே என் கைக்கடிப்பாக
பாலிருக்கும் செம்பாக
பசிதாகம் தீர்ப்பாக (வால்பாறை)
ஆல்பம்: என்னப்பாரு
பாடியவர்: மால்குடி சுபா