menu-iconlogo
logo

Ninaithathu Yaaro

logo
লিরিক্স
ஆண்: நினைத்தது யாரோ நீ தானே

தினம் உன்னை பாட நான் தானே

நினைத்தது யாரோ நீ தானே

தினம் உன்னை பாட நான் தானே

நீ தானே என் கோயில் உன் நாதம் என் நாவில்

ஊர்வலம் போவோம் பூந்தேரில்

பெண்: நினைத்தது யாரோ நீ தானே

தினம் உன்னை பாட நான் தானே

ஆண்: மனதில் ஒன்று விழுந்ததம்மா

விழுந்தது பூவாய் எழுந்ததம்மா

கனவில் ஒன்று தெரிந்ததம்மா

கைகளில் வந்தே புரிந்ததம்மா

நானறியாத உலகினை பார்த்தேன்

நாம் பிரியாத உறவினில் சேர்ந்தேன்

எனக்கோர் கீதை உன் மனமே

படிப்பேன் நானும் தினம் தினமே

பரவசமானேன் அன்பே...

பெண்: நினைத்தது யாரோ நீ தானே

தினம் உன்னை பாட நான் தானே

பெண்: பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்

பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்

காலமெல்லாம் காத்திருப்பேன்

கண்ணனைத் தேடி சேர்ந்திருப்பேன்

பூ விழி மூட முடியவும் இல்லை

மூடிய போது விடியவும் இல்லை

கடலை தேடும் காவிரி போல்

கலந்திட வேண்டும் உன் மடி மேல்

இது புது சொந்தம் அன்பே...

ஆண்: நினைத்தது யாரோ நீ தானே

தினம் உன்னை பாட நான் தானே

நீ தானே என் கோயில் உன் நாதம் என் நாவில்

ஊர்வலம் போவோம் பூந்தேரில்

பெண்: நினைத்தது யாரோ நீ தானே

தினம் உன்னை பாட நான் தானே

Mano/Jikki-এর Ninaithathu Yaaro - লিরিক্স এবং কভার