menu-iconlogo
logo

Kalyana Naal Paarkka

logo
লিরিক্স
திரைப்படம் : பறக்கும் பாவை (1966)

இசை : M.S. விஸ்வநாதன்

பாடியவர்கள் : TMS P சுஷீலா

வரிகள் : கவிஅரசு கண்ணதாசன்

ஆ: கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா

நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா..

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா

நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா..

செல்லாத இடம் நோக்கி செல்லலாமா

சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா..

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா

நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா..

பெ:வண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா

மந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா..

வண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா

மந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா..

சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா..

தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா

நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா..

செல்லாத இடம் நோக்கி செல்லலாமா..

சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா..

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா

நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா..

ஆ: கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா

பொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா..

கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா..

பொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா..

நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா..

நாளை இன்னும் அதிகமென்று பிரிந்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா

நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா..

பெ:சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா

தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா

சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா..

தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா

ஆ: அன்தி பட்டு வானத்திலே வலம் வருவோமா

அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா

இருவர்: கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா

நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா..

செல்லாத இடம் நோக்கி செல்லலாமா

சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா..

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா

நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா..

P. Susheela/T. M. Soundararajan-এর Kalyana Naal Paarkka - লিরিক্স এবং কভার