menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
கண்ணோடு கண்ணோடு வந்த காதல்

காதோடு காதோடு பேசும் காதல்

வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்

இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்

உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்

காதோடு காதோடு பேசும் காதல்

வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்

இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்

இசை : தேவா

பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், ஷோபனா

அன்பே அன்பே உன் ஆடை கொடு

உன் திருமுகம் தெரியட்டுமே

திங்கள் பெண்ணே உன் திரை விலக்கு

கண் நிலவுகள் மலரட்டுமே

உன் கால் கொலுசு சங்கீதம் பாடாதா

உன் கண்மணியில் என் காலம் விடியாதா

உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா

உயிரின் குரல் தான்

அடி உனக்கு கேட்கவில்லையா ?

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்

காதோடு காதோடு பேசும் காதல்

வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்

இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்

வரிகள் : வைரமுத்து

நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு

என் நிழலுக்குள் கரைந்துவிடு

பூக்கள் கொஞ்சும் என் கூந்தலுக்குள்

ஒரு குடித்தனம் தொடங்கிவிடு

உன் நேசம் தான் என் வாழ்வின் ஆதாயம்

உன் நெஞ்சில்தான் முடியும் என் ஆகாயம்

நாளை சில கிரகங்கள் நாம் சேர உருவாகட்டும்

உயிர்கள் மறைந்தால்

கடல் அலைகள் காதல் சொல்லட்டும்

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்

காதோடு காதோடு பேசும் காதல்

வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்

இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்

உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்

காதோடு காதோடு பேசும் காதல்

வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்

இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்

P. Unni Krishnan/Mahanadhi Shobana থেকে আরও

সব দেখুনlogo