menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

ஒரு வானவில்…

வளர் கூந்தலின் மணம் சுகம்

இதமாகத் தூங்கவா

வனராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா

மடிகொண்ட தேனை மனம் கொள்ள

வருகின்ற முல்லை இங்கே

கலைமானின் உள்ளம் கலையாமல்

களிக்கின்ற கலைஞன் எங்கே

கலைகள் நீ கலைஞன் நான்

கவிதைகள் பாடவா

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

ஒரு வானவில்...

உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை

உனக்காகவே மலர்ந்தது கலைக்கோவில் மல்லிகை

இனிக்கின்ற காலம் தொடராதோ

இனியெந்தன் உள்ளம் உனது

அணைக்கின்ற சொந்தம் வளராதோ

இனியெந்தன் வாழ்வும் உனது

தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம்

ஒரு வானவில் போலே (ஆ: ம்ம்..ம்ம் )

என் வாழ்விலே வந்தாய் (பெ: ம்ம்..ம்ம் )

உன் பார்வையால் எனை

வென்றாய் (ம்ம்.ம்ம்..)

என் உயிரிலே நீ கலந்தாய் (ம்ம்.ம்ம்..)

ஒரு வானவில் போலே ( ம்ம்..ம்ம் )

என் வாழ்விலே வந்தாய் (ம்ம்..ம்ம் )

உன் பார்வையால் எனை

வென்றாய் (ம்ம்.ம்ம்..)

என் உயிரிலே நீ கலந்தாய் (ம்ம்..ஆஅ)

ஒரு வானவில்.. (ம்ம்..)

P.Jayachandran/S. Janaki থেকে আরও

সব দেখুনlogo