menu-iconlogo
huatong
huatong
avatar

Kode enge thedi - Dhaya

Prashanth/Dhayahuatong
🎤🎼🐦Dhaya🐦🎼🎤huatong
লিরিক্স
রেকর্ডিং
பாடல் பதிவேற்றம் : DHAYA

ஆண் : கூடு எங்கே

தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே

உறவு எங்கே

ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே

கேள்வியே பதில் என்ன பதில்களே வழி என்ன

நீங்கள் சொல்லுங்களேன்

ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே

ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே

பெண் : கூடு எங்கே

தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே

உறவு எங்கே

ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே

BGM

ஆண் : கோபமாய் பேசினேன்

வார்த்தையை வீசினேன்

உன்னை வாயாடிப் பெண்ணாக இன்று

பெண் : காலங்கள் தந்திடும்

காயங்கள் தாங்கினேன்

உந்தன் சொல் கூட அது போல ஒன்று

ஆண் : பூந்தோகையே

சொன்ன என் வார்த்தையே

உன்னை அறியாமல்

நான் சொன்ன மொழிதானம்மா

பெண் : என் சோகமே என்றும்

என்னோடுதான்

எந்தன் சுமை தாங்கி

எந்நாளும் நான்தானய்யா

ஆண் : கூடு எங்கே

தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே

பெண் : உறவு எங்கே

ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே

BGM

பெண் : ஈன்ற தாய் உண்டு

நீ உண்டு ஓர் வீட்டிலே

அந்தத் தாய் கூட எனக்கில்லை சொல்ல

ஆண் : அந்தத் தாய் போல

நான் உண்டு உன் வாழ்விலே

இங்கு யாரும் அனாதைகள் அல்ல

பெண் : ஓர் ஓடத்தில் சேர்ந்து

நாம் போகிறோம்

சேரும் கரை ஒன்று

ஓர் நாளில் நாம் காணலாம்

ஆண் : கீழ் வானிலே தோன்றும்

விடி வெள்ளி போல்

வாழ்வில் ஒளி வீசும்

எதிர் காலம் உண்டாகலாம்

பெண் : கூடு எங்கே

தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே

உறவு எங்கே

ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே

கேள்வியே பதில் என்ன பதில்களே வழி என்ன

நீங்கள் சொல்லுங்களேன்

ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே

ஆண் : ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே

பெண் : கூடு எங்கே

தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே

ஆண் : உறவு எங்கே

ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே

பாடல் பதிவேற்றம் : DHAYA

Prashanth/Dhaya থেকে আরও

সব দেখুনlogo