ராஜா முகமது சீன தேசத்திலிருந்து
மாப்பிள்ளை
இசை: இளையராஜா
வரிகள்: வாலி
முக்குளித்து முத்தெடுத்து
சொக்கத் தங்க நூலெடுத்து
வக்கணையாய் நான் தொடுத்து
வன்னமொழிப் பெண்ணுக்கெனக் காத்திருக்க
பூங்குழலில் பூமுடித்து
மங்கலமாய்ப் பொட்டுவைத்து
மெய்யணைத்து கையணைக்க
மன்னவனின் நல்வரவைப் பார்த்திருக்க
இன்னும் ஒரு ஏக்கம் என்ன
என்னைத் தொடக் கூடாதா?
உன்னைத் தொடத் தேனும் பாலும்
வெள்ளமென ஓடாதா?
முன்னழகும் பின்னழகும் வாட இளமை ஒரு
முத்திரையை வைப்பதற்கு வாட மயக்கும் இள
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவைக் கன்னம் கொண்ட தேனே தேனே
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவைக் கன்னம் கொண்ட தேனே தேனே
உள்ளமெல்லாம் அள்ளித்தரவா வா வா
வஞ்சியெந்தன் வள்ளல்லவா காதல்
மல்லிகை வண்டாட்டம் தான்
போடு நீ கொண்டாட்டம் தான்
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவைக் கன்னம் கொண்ட தேனே தேனே
நானன்னன்ன நன்னன்னன்ன நன்னானனா
லாலல்லல்ல லல்லல்லல்ல லல்லால் லலா
இணைந்தமைக்கு நன்றி
தமிழுக்கு தொடரவும்