சிங்காரமா ஊரு இது சென்னையின்னு பேரு
ஊரை சுத்தி ஓடுதைய்யா கூவம் ஆறு
சிங்காரமா ஊரு இது சென்னையின்னு பேரு
ஊரை சுத்தி ஓடுதைய்யா கூவம் ஆறு
தொட்டாலும் கை மணக்கும்
தொட்ட இடம் பூ மணக்கும்
கூவமுன்னு பேரு சொன்னா சொன்னவங்க
வாய் மணக்கும்
கண்ணகியும் இங்கு வந்தா
கண்ணடிக்கும் கூட்டமுங்க
மதுரைய எரிச்சவளே மனசு மாற கூடுமுங்க
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
புத்தனும் இப்போ பட்டணம் வந்தா
போதை மரத்துல ஏறிக்குவான்
தோட்டத்துல பாத்தி கட்டி
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துகுள்ள பாத்திய கட்டுற
பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி
மனசு கெட்டுடுமே கெட்டுடுமே
சோத்துகுள்ள பாத்திய கட்டுற
பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி
மனசு கெட்டுடுமே கெட்டுடுமே
தோட்டத்துல பாத்தி கட்டி
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்