இக்கரைக்கு அக்கரை பச்சை என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
என் வீட்டு கண்ணாடி
என் முகத்தை காட்டவில்லை
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
படம்: அக்கரை பச்சை
பாடியவர்: எம்.எஸ்.வி,
இசை: எம்.எஸ்.வி
சம்சாரியின் ஆசை சன்யாசம் அந்த
சன்யாசியின் ஆசை சம்சாரம்
சம்சாரியின் ஆசை சன்யாசம் அந்த
சன்யாசியின் ஆசை சம்சாரம்
கானலுக்கு மானலயும் கண்கண்ட காட்சி
கண் முன்னே காணுங்கள் ஒரு கோடி சாட்சி
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
Supported by CeylonRadio
This HQ Paid Track
கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள் போக
வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
கல் தரையில் கை போட்டு நீந்துகின்ற மனிதா
காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
Supported by CeylonRadio
This HQ Paid Track
மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும் கோடை
வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்
அது தேடி இது தேடி அலைகின்றாய் வாழ்வில்
எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்
அவரவர்க்கு வாய்த்த
இடம் அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை