menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
ஏரெடுத்து ஏரெடுத்து பாடுபடு பாடுபடு

ஏரெக்கொண்டு ஊருக்கெல்லாம்

சோறுகொடு சோறுகொடு

பாடுபட்டா பொன்வெளயும் பூமியிது பூமியிது

பூமியத்தான் மிஞ்சுகிற சாமி எது சாமி எது

இந்த கானிநெலந்தான் நாம கேட்டவரந்தான்

என்றும் இல்லை என்று

சொல்லாமல் தானடி கொடுக்கும்...

ஏரெடுத்து ஏரெடுத்து பாடுபடு பாடுபடு

ஏரெக்கொண்டு ஊருக்கெல்லாம்

சோறுகொடு சோறுகொடு

வெதச்சதெல்லாம் மொளச்சுவரும் நேரம் நேரம்

பொறந்துருச்சு நமக்கு நல்ல யோகம் யோகம்

உழைக்கிறவன் பெருமையெல்லாம் ஊரே பேசும்

உழவனுங்க எழச்சுபுட்ட ஏது தேசம்

பட்டணத்து மக்கலெல்லாம்

சோத்துலதான் கையவக்க

பட்டிக்காட்டு சுப்பன் குப்பன்

சேத்துளதான் காலவப்பான்

எந்நாளுமே ஏர்புடுச்சா

எல்லாருமே சேந்தொழச்ச

வந்திடும் நெல்லுமணி...

மின்னிடும் பொன்னுமணி ...

ஏரெடுத்து ஏரெடுத்து பாடுபடு பாடுபடு

ஏரெக்கொண்டு ஊருக்கெல்லாம்

சோறுகொடு சோறுகொடு

இந்த கானிநெலந்தான் நாம கேட்டவரந்தான்

என்றும் இல்லை என்று

சொல்லாமல் தானடி கொடுக்கும் ...

ஏரெடுத்து ஏரெடுத்து பாடுபடு பாடுபடு

ஏரெக்கொண்டு ஊருக்கெல்லாம்

சோறுகொடு சோறுகொடு...

இசை

குறுவையெல்லாம் அறுவடைக்கு ஏங்கும் நேரம்

கறுக்கருவா எடுத்துகிட்டு வாங்க யாரும்

கதிரடுச்சு களத்துலதான் ஓரம் சேர்த்து

பதரிருந்தா மொரத்திலதான் காத்தில் தூத்து

பக்குவமா மூட்டகட்டி பாரவண்டில் ஏத்திவிடு

பக்கத்தூரு சந்தையில வித்துபோட்டு காச எடு

தேனாறுந்தான் ஆடிவரும்

பாலாறுந்தான் ஓடிவரும்

பாரடி ருக்குமணி...

பஞ்சங்கள் இல்லை இனி...

ஏரெடுத்து ஏரெடுத்து பாடுபடு பாடுபடு

ஏரெக்கொண்டு ஊருக்கெல்லாம்

சோறுகொடு சோறுகொடு

இந்த கானிநெலந்தான் நாம கேட்டவரந்தான்

என்றும் இல்லை என்று

சொல்லாமல் தானடி கொடுக்கும்...

ஏரெடுத்து ஏரெடுத்து பாடுபடு பாடுபடு

ஏரெக்கொண்டு ஊருக்கெல்லாம்

சோறுகொடு சோறுகொடு

பாடுபட்டா பொன்வெளயும் பூமியிது பூமியிது

பூமியத்தான் மிஞ்சுகிற

சாமி எது சாமி எது... ஏய்

நன்றி

S.p.balasubrahmaniam থেকে আরও

সব দেখুনlogo