menu-iconlogo
logo

Avatha Paiya Paradesi

logo
লিরিক্স
அவத்தப் பையா செவத்தப் பையா

அழிச்சாட்டியமேனடா

கவுச்சிமேல ஆசப்பட்ட

கரிச்சாங்குஞ்சு நானடா

செரட்டையில் பேஞ்ச சிறுமழ போல

நெஞ்சுக் கூட்டுல நெறஞ்சிருக்க

கஞ்சியில் கரைஞ்ச உப்புக் கல்லப் போல

கண்ணுக் கூட்டுல ஒழிஞ்சிருக்க

நம்ம பூமி வரண்டிருக்கு

உன் நாக்கு ஈரம் பட்டு

வாழ்க்க நனஞ்சிருக்கு

ஓஓஓ... அவத்தப் பொண்ணே செவத்தப் பொண்ணே

அழிச்சாட்டியமேனடி

வெந்நித்தண்ணி காச்சவா

ஓன் மேலு காலு ஊத்தவா

காச்சுப்போன கையில

ஓன் காஞ்ச மூஞ்சி தே(ய்)க்கவா

கொட்டாங்குச்சியில் மேலு தேச்சு

குளிக்க வையடி

என் அக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே

நீ தள்ளி நில்லடி

வராதடி தொடாதடி

ஓஓஓ... அவத்தப் பையா செவத்தப் பையா

அழிச்சாட்டியமேனடா

கூத்துப் பாக்கப் போகலாம்

கூடமாட வாறியா

சொல்லுப் பேச்சு கேக்குறேன்

கொஞ்சம் நெல்லுச்சோறு தாறியா

எள்ளு போட்ட ஈச தாறேன் ஒன்னத் தருவியா

நான் முந்தி போட்டு மூடி வச்ச பூக்கள

நீ மோந்து பாத்தியா

முத்தாடையா முட்டாப் பையா

அவத்தப் பொண்ணே செவத்தப் பொண்ணே

அழிச்சாட்டியமேனடி

இழுத்துவச்சு கழுத்தறுக்க

இளிச்சவாயன் நானடி

கயித்த அறுத்த கன்னுகுட்டி போல

சித்தன் போக்கில் நான் அலஞ்சேன்

கருவாச்சிறுக்கி சீலையில் இறுக்கி

கட்டிப்போட்டு சிரிக்கிறியே

ஓன் சூழ்ச்சி பலிச்சிருச்சே

நெல்லுச்சோத்துப் பானைக்குள்ள

பூன விழுந்திருச்சே...

Vandana Srinivasan-এর Avatha Paiya Paradesi - লিরিক্স এবং কভার