menu-iconlogo
logo

Vaaraayo Vennilave

logo
Liedtext
வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

அகம்பாவம் கொண்ட சதியால்

அறிவால் உயர்ந்திடும்

பதி நான்

அகம்பாவம் கொண்ட சதியால்

அறிவால் உயர்ந்திடும்

பதி நான்

சதிபதி விரோதம்

மிகவே

சிதைந்தது இதம் தரும்

வாழ்வே

வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

வாக்குரிமை தந்த பதியால்

வாழ்ந்திடவே வந்த சதி நான்

வாக்குரிமை தந்த பதியால்

வாழ்ந்திடவே வந்த சதி நான்

நம்பிட செய்வார்

நேசம்...

நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

தன் பிடிவாதம் விடாது

என் மனம் போல் நடக்காது

தன் பிடிவாதம் விடாது

என் மனம் போல் நடக்காது

நமக்கென எதுவும் சொல்லாது

நம்மையும் பேச விடாது

வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

அனுதினம் செய்வார்

மோடி

அகமகிழ்வார் போராடி

அனுதினம் செய்வார்

மோடி

அகமகிழ்வார் போராடி

இல்லறம் இப்படி நடந்தால்

நல்லறமாமோ நிலவே

வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே