menu-iconlogo
huatong
huatong
avatar

Vadipatti Mappillai

Gangai Amaranhuatong
msb246huatong
Liedtext
Aufnahmen
பாடல்: வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு

பாடகர்கள் : கங்கை அமரன்

மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடல் பதிவேற்றம்:

ஆண் : வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு

வாக்கப்பட்டு வாரம்ன்னு

வாக்கு சொல்லி போனவளே

நாகரத்தினமே

ஆண் :ஏ வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு

வாக்கப்பட்டு வாரம்ன்னு

வாக்கு சொல்லி போனவளே

நாகரத்தினமே

ஆண் :இப்ப வாச கதவ சாத்துறியே

நாகரத்தினமே

என்னைய மோசம் பண்ண பார்க்குறியே

நாகரத்தினமே

இப்ப வாச கதவ சாத்துறியே

நாகரத்தினமே

என்னைய மோசம் பண்ண பார்க்குறியே

நாகரத்தினமே...

இசை :

பாடல் பதிவேற்றம்:

பெண் : கூடலூரு கோணகண்ணேன்

கூடலூரு கோணகண்ணேன்

கூட நகை தாரம்ன்னு

கொலப்பி புட்டான் எங்கப்பன் மனச

ஆச ராசாவே

கூடலூரு கோணகண்ணேன்

கூட நகை தாரம்ன்னு

கொலப்பி புட்டான் எங்கப்பன் மனச

ஆச ராசாவே

பெண் : ஆனா நேசம் மட்டும்

மாறாதுங்க ஆசை ராசாவே

உங்கள மோசம் பண்ணி

வாழமாட்டேன் ஆச ராசாவே

பெண் : நேசம் மட்டும்

மாறாதுங்க ஆசை ராசாவே

உங்கள மோசம் பண்ணி

வாழமாட்டேன் ஆச ராசாவே

ஆண் : மாமியாருக்கு சீல தொவைச்சு

மாடு கண்ணு மேய்ச்சு கட்டி..

ஆண் : ஏய் மாமியாருக்கு சீல தொவைச்சு

மாடு கண்ணு மேய்ச்சு கட்டி..

மாலை மாத்த தேதி குறிச்சேன்

நாகரத்தினமே ஏ…

ஆண் :என் மாமியாருக்கு சீல தொவைச்சு

மாடு கண்ணு மேய்ச்சு கட்டி..

மாலை மாத்த தேதி குறிச்சேன்

நாகரத்தினமே…

ஆண் : இப்படி ஆள மாத்தி

போனியினா நாகரத்தினமே

நான் வாழ மாட்டேன்

பூமியில நாகரத்தினமே

2

1

பெண் : மாமியார சொல்லாதீக

மாமானாரு செஞ்ச வேலை

ஆண் : எல்லாம் உங்க அப்பன்

பண்ணுன வேலைதானா

இரு கவனிச்சுக்குறேன் அவன

பெண் : மாமியார சொல்லாதீக

மாமானாரு செஞ்ச வேலை

மாயச்சுக்குவேன் உசுரகூட

ஆச ராசாவே

ஆண் : அய்யோ அப்படிலாம் பண்ணிடாதம்மா

பெண் : மாமியார சொல்லாதீக

மாமானாரு செஞ்ச வேலை

மாயச்சுக்குவேன் உசுரகூட

ஆச ராசாவே

பெண் : உங்கள மாத்தி மாலை

போடாமாட்டேன் ஆச ராசாவே

கொஞ்சம் காத்திருக்க வேணுமுங்க

ஆச ராசாவே…

இசை :

பாடல் பதிவேற்றம்:

ஆண் : முக்கா பவுனு தாலி ரூவா

முந்நூறுக்கு சீல வச்சே...

ஆண் :முக்கா பவுனு தாலி ரூவா

முந்நூறுக்கு சீல வச்சு

பரிசம் போட்டு வருஷம் ஆச்சு

நகரத்தினமே...ஏ

முக்கா பவுனு தாலி ரூவா

முந்நூறுக்கு சீல வச்சு

பரிசம் போட்டு வருஷம் ஆச்சு

நகரத்தினமே

ஆண் : இப்ப வார்த்த மாறி பேசுறானே

நாகரத்தினமே

ஒப்பன் வேற மாப்பிள்ள

பார்க்குறானே நாகரத்தினமே

பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து

பட்டா நிலம் தந்தாகூட….

பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து

பட்டா நிலம் தந்தாகூட….

கட்டாயமா மாறமாட்டேன்

ஆச ராசாவே

ஆண் : அடி ராசாத்தி

அப்படி சொல்லு குட்டி

பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து

பட்டா நிலம் தந்தாகூட….

கட்டாயமா மாறமாட்டேன்

ஆச ராசாவே

நீங்க நிக்காதிங்க வெசனம்பட்டு

ஆச ராசாவே

உங்கள எக்காலமும்

பிரியமாட்டேன் ஆச ராசாவே...

இந்த இனிமையான பாடலில்

இணைந்து பாடியமைக்கு

நன்றி வணக்கம்

Mehr von Gangai Amaran

Alle sehenlogo