menu-iconlogo
logo

Punnagai Mannan Poovizhi Kannan HQ

logo
Liedtext
Hello Everyone

This is Hawk's Creation

Enjoy Singing

Dont forget to Like and Follow

பெண்1 : நவராத்திரியில்..,

கொலும்மண்டபத்தில்..,

இவள்பாடலிலே.., ஒருகேள்வி.., பிறக்கும்..,

பெண்2 : ம்ம்ம்ம்….,(சிரிப்பு)

பெண்2 : நவராத்திரியில்..,

கொலும்மண்டபத்தில்..,

இவள்.., பாடலிலே.., பதில்

மறைந்திருக்கும்..,

பெண்1 : புன்னகை மன்னன்

பூவிழி கண்ணன் ருக்மணிக்காக

பெண்1 : புன்னகை மன்னன்

பூவிழி கண்ணன் ருக்மணிக்காக

அவன் புல்லாங்குழலில் உள்ளம்

மயங்கும் கண்மணிக்காக

பெண்2 : புன்னகை மன்னன்

பூவிழி கண்ணன் இருவருக்காக

இந்த பாமா ருக்மணி

இருவருமே அவன் ஒருவனுக்காக

பெண்1 : புன்னகை மன்னன்

பூவிழி கண்ணன் ருக்மணிக்காக

பெண்2 : இந்த பாமா ருக்மணி

இருவருமே அவன் ஒருவனுக்காக

சரணம் 2

பெண்1 : தேவன் முருகன் கோவில்

கொண்டது வள்ளியின் நெஞ்சதிலே

பெண்2 : அவன் தேவானை என்றொரு

பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே

பெண்1 : தேவன் முருகன் கோவில்

கொண்டது வள்ளியின் நெஞ்சதிலே

பெண்2 : அவன் தேவானை என்றொரு

பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே

பெண்1 : மாலையிட்டால் அது ஓர் முறை

தான் என நினைப்பது பெண்மையன்றோ

பெண்2 : ஒரு மாலையை இரு தோளுக்கு

சூடுதல் இறைவன் தன்மையன்றோ

பெண்1 : அது ஏட்டில் உள்ள கதை

பெண்2 : இது இன்றும் தொடரும் கதை

பெண்1 : அது பொம்மை கல்யாணம்

பெண்2 : இது உண்மை கல்யாணம்

பெண்2 : புன்னகை மன்னன்

பூவிழி கண்ணன்.....

பெண்1 : ருக்மணிக்காக..

அவன் புல்லாங்குழலில் உள்ளம்

மயங்கும் கண்மணிக்காக

சரணம் 2

பெண்1 : கொஞ்சும் கணவன் குங்குமம்

வைப்பது ஒருத்தியின் நெற்றியிலே

பெண்2 : அந்த குங்குமம் வைத்தவன்

சங்கமமானது இருவரின் நெஞ்சினிலே

பெண்1 : கொஞ்சும் கணவன் குங்குமம்

வைப்பது ஒருத்தியின் நெற்றியிலே

பெண்2 : அந்த குங்குமம் வைத்தவன்

சங்கமமானது இருவரின் நெஞ்சினிலே

பெண்1 : ஈர் உயிர் என்றும் ஓர்

உடல் தன்னில் இருந்திட வழியுண்டோ

பெண்2 :ஒரு முகத்துக்கு இரண்டு விழிகளை

வைத்த இயற்கையில் தவறுண்டோ

பெண்1 : இந்த கேள்விக்கு பதில் ஏது

பெண்2 : சிலர் வாழ்வுக்கு பொருள் ஏது

பெண்1 : அது உறவின் மாறாட்டம்

பெண்2 : இது உரிமை போராட்டம்

பெண்1 : புன்னகை மன்னன்

பூவிழி கண்ணன் ருக்மணிக்காக

அவன் புல்லங்குழலில் உள்ளம்

மயங்கும் கண்மணிக்காக

பெண்2 : புன்னகை மன்னன்

பூவிழி கண்ணன் இருவருக்காக

இந்த பாமா ருக்மணி இருவருமே

அவன் ஒருவனுக்காக..!

பெண்1 : புன்னகை மன்னன்

பூவிழி கண்ணன் ருக்மணிக்காக

பெண்2 : இந்த பாமா ருக்மணி

இருவருமே அவன் ஒருவனுக்காக

Thanks for Singing

Dont forget to Like and Follow