M: பறக்கும் திசையேது ...
இந்த பறவை அறியாது....
உறவோ தெரியாது.....
அது உனக்கும் புரியாது.....
F: பாறையிலே.. பூமொளைச்சு.
பார்த்தவக யாரு.....
அன்பு கொண்ட ..நெஞ்சத்துக்கு
ஆயிசு நூறு....
M: காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
F: தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே.....
F: கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே...
கொடுக்கவா.. தடுக்கவா ..
தவிக்கிறேன் நானே...
பறிக்கச் சொல்லி தூண்டுதே..
பவழமல்லித் தோட்டம்...
நெருங்க விடவில்லையே..
நெஞ்சுக்குள்ள கூச்சம்...
M:கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே