காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்
ஆ..ஆ..ஒஹோ ஒஹோ ஒஹோ ஹொஹோ
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
னா..னா..னன னன னன னனா
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
தென்குமரி கடலினிலே
சிவந்த மாலைப் பொழுதினிலே
பெண் குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
ஆ..ஆஆ ஆ ஆ ஆஆ
தென் குமரி கடலினிலே
சிவந்த மாலைப் பொழுதினிலே
பெண் குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
நாம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
தேனருவி கரையினிலே
திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல் தழுவ குளிக்கணும்
நான் நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
பொய் கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்
பொய் கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
பூம்புகாரின் நாயகியாம்
புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளை சேர்க்கணும்
ஆ..ஆஆ ஆ ஆ ஆஆ
பூம்புகாரின் நாயகியாம்
புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளை சேர்க்கணும்
மாமியார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும்
மாமியார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும்
இந்த மாநிலமே உன் புகழைப் பாடணும்
இந்த மாநிலமே உன் புகழை பாடணும்
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
திருமகளும் உன் அழகைப் பெற வேண்டும்