மரகத வல்லிக்கு மணக்கோலம்
என் மங்கல செல்விக்கு மலர்க்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தாள்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்
கோலம்.... திருக்கோலம்....
மரகத வல்லிக்கு மணக்கோலம்
என் மங்கல செல்விக்கு மலர்க்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தாள்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்
கோலம்... திருக்கோலம்...
காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
கட்டித் தங்கம் இனிமேல் அங்கே
என்ன பூவை அணிவாளோ
கட்டிக் கொண்ட கணவன் வந்து
சொன்ன பூவை அணிவாளோ
தினந்தோறும் திருநாளோ
மரகத வல்லிக்கு மணக்கோலம்
என் மங்கல செல்விக்கு மலர்க்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தாள்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்
கோலம்... திருக்கோலம்...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
மலர் என்ற உறவு பறிக்கும் வரை
மகள் என்ற உறவு கொடுக்கும் வரை
உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன்
உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்
எந்தன் வீட்டுக் கன்று இன்று
எட்டி எட்டிப் போகுறது
கண்ணின் ஓரம் தண்ணீர் வந்து
எட்டி எட்டிப் பார்க்கிறது
இமைகள் அதை மறைக்கிறது
மரகத வல்லிக்கு மணக்கோலம்
என் மங்கல செல்விக்கு மலர்க்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தாள்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்
கோலம்.... திருக்கோலம்
கோலம்..... திருக்கோலம்
நன்றி... நன்றி... நன்றி....